சுடச்சுட

  

  கோவை அரசு மருத்துவமனையில் புதிய தாய்- சேய் சிகிச்சைப் பிரிவு துவக்கம்

  By கோவை,  |   Published on : 26th June 2014 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 6.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால தாய்- சேய் சிகிச்சைப் பிரிவை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

  உலக வங்கி நிதியுதவியுடன் தமிழக அரசின் "சீமாங்' திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 4,144 சதுர அடி பரப்பளவில் 170 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த அவசரகால தாய்- சேய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டது.

  புதிய சிகிச்சைப் பிரிவு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவில் மகப்பேறு முன் கவனிப்பு பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆபத்தான நிலையில் உள்ள தாய்மார்களுக்கான சிகிச்சைப் பிரிவு, சினைப்பருவ வலிப்பு நோய், ரத்த வங்கி, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, பேறுகால பின்கவனிப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்த புதிய சிகிச்சைப் பிரிவில் பல்வேறு நவீன உபகரணங்களும், புதிய படுக்கைகளும் அமைப்பட்டுள்ளன. இச்சிகிச்சைப் பிரிவில் வியாழக்கிழமை முதல் சிகிச்சைகள் தொடங்கும் என்று மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai