சுடச்சுட

  

  சூலூர் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் திறப்பு

  By சூலூர்,  |   Published on : 26th June 2014 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் புதன்கிழமை தமிழக முதல்வரால் காணொலி முறையில் திறந்து வைக்கப்பட்டது.

  பல்லடம் வட்டத்திலிருந்து பிரித்து புதிதாக துவங்கப்பட்ட சூலூர் வட்டாட்சியர் அலுவலகம், வாடகை கட்டடத்திலேயே இயங்கி வந்தது. இந்நிலையில், இதற்கென சூலூர் சந்தைப்பேட்டையருகே புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

  இதையடுத்து, சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் புதன்கிழமை மதியம் புதிதாக அமைந்துள்ள இந்த வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

  கோட்டாட்சியர் குணசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கனகராஜ், சூலூர் ஒன்றியத் தலைவர் மாதப்பூர் பாலு, வட்டாட்சியர் அபிபூர் ரகுமான், பேரூராட்சி செயல் அலுவலர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai