Enable Javscript for better performance
ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளியில் மாணவர் தேர்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளியில் மாணவர் தேர்தல்

    By பெ.நா.பாளையம்  |   Published on : 26th June 2014 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.

    ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தலின் முக்கியத்துவத்தை உணரும் பொருட்டும், தேர்தல் நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்தேர்தலில், மாணவர் தலைவர், மாணவித் தலைவி மற்றும் விளையாட்டுத்துறை, கலை, இலக்கியம், ஒழுக்கம், சுகாதாரம் ஆகிய துறைகளுக்கான பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முன்னதாக, வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களைக் காண்பித்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு விருப்பப்பட்ட சின்னங்களுக்கு வாக்குகளை பதிவு செய்தனர்.

    இதனை முதல்வர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். வெற்றி பெற்றவர்கள் வியாழக்கிழமை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் பதவியேற்க உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai