சுடச்சுட

  

  "டீசல், பெட்ரோலோடு 50 சதவீத எத்தனாலைக் கலக்க வேண்டும்'

  By கோவை  |   Published on : 26th June 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டீசல், பெட்ரோலோடு 50 சதவீத எத்தனாலைக் கலக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

  இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

  சர்க்கரைக்கான இறக்குமதி வரியை உயர்த்தி உள்நாட்டு கரும்பு விவசாயிகளை வாழ வைக்கும் முயற்சியை வரவேற்கிறோம். டீசல் மற்றும் பெட்ரோலில் முறையே 5 மற்றும் 10 சதவீத எத்தனால் கலக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம். இந்நிலைப்பாட்டை முந்தைய அரசு எடுத்திருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டவில்லை.

  உலகில் பிரேசில் போன்ற நாடுகள் 80 சதவீத எத்தனாலைக் கலந்து டீசல், பெட்ரோல் தேவையைக் குறைப்பதுடன் காற்று மாசுபடுவதையும் தடுக்கின்றன. டீசல், பெட்ரோலோடு குறைந்தது 50 சதவீத எத்தனாலையாவது கலக்க வேண்டும். பிற நாடுகளில் இம்முறை உள்ளபோது நாம் ஏன் தயங்க வேண்டும்? இதன்மூலம் அன்னியச் செலாவணியின் தேவை குறையும்; கரும்பு விவசாயமும் பாதுகாக்கப்படும்.

  சர்க்கரை வரியை உயர்த்துவதன் மூலம் உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் விலை உயரும். விலை அதிகரிப்பால் கிடைக்கும் தொகை விவசாயிகளுக்குச் சென்றுசேர வேண்டும்; இடைத்தரகர்களோ, கரும்பு ஆலைகளோ லாபமடைந்து விவசாயிகள் ஏமாற்றமடையக் கூடாது. அரசு கவனமாக இருந்து விவசாயிகளை வாழவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai