Enable Javscript for better performance
நகைக்கடை உரிமையாளரிடம் ஓடும் பேருந்தில் 21 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    நகைக்கடை உரிமையாளரிடம் ஓடும் பேருந்தில் 21 பவுன் திருட்டு

    By கோவை  |   Published on : 26th June 2014 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் ஓடும் பேருந்தில் நகைக்கடை உரிமையாளரிடம் 21 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்துபோலீஸார் கூறியது:

    நீலகிரி மாவட்டம், கூடலூர், சேரம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பொன்.அழகப்பன் (42), நகைக்கடை வைத்துள்ளார். செவ்வாய்க்கிழமை, கோவை, ராஜவீதியில் தான் வழக்கமாக நகைகள் வாங்கும் நகைக்கடையில் 21 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு, உக்கடத்திலிருந்து பேருந்து மூலமாக, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

    அங்கு, பேருந்திலிருந்து இறங்கியபோது பையிலிருந்த நகைகளை மர்ம நபர்கள் யாரோ அவருக்குத் தெரியாமல் திருடிச் சென்றது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சாயிபாபா காலனி போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் இரு தினங்களுக்கு முன் பல்லடத்திலிருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் பயணியிடம் ரூ. 3.5 லட்சம் பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai