சுடச்சுட

    

    பல்கலை. விளையாட்டு போட்டி:மகாலிங்கம் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்

    By பொள்ளாச்சி  |   Published on : 26th June 2014 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்றன .

    2013-14-ஆம் ஆண்டிற்கான இந்த விளையாட்டு போட்டிகளில், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், சதுரங்கம், கைப்பந்து, கிரிக்கெட், பூப்பந்து ஆகிய போட்டிகளில் முதலிடத்தையும், கோ-கோ, மேசைப்பந்து, ஹாக்கி, இறகுப் பந்து, டென்னிஸ் ஆகிய போட்டிகளில் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

    350 புள்ளிகள் பெற்ற இக்கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கிடைத்தது. கடந்த 20-ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், துணை வேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    பரிசு பெற்ற மாணவர்களை என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, இயக்குநர் விஜயரங்கன், கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai