Enable Javscript for better performance
பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 26th June 2014 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி காரமடையில் புதன்கிழமை நடைபெற்றது.

    சென்னை அரசு சுற்றுச்சூழல் துறை, நெல்லை அரும்புகள் அறக்கட்டளை மற்றும் கோவை இமயம் சமூகநல மையம் சார்பில் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் மந்திரபதி தலைமை வகித்தார். இமயம் மைய ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். களப்பணியாளர் சாந்தி ஸ்டெல்லா வரவேற்றார்.

    இதில் சிறப்பாளராக பங்கேற்ற அரும்புகள் அறக்கட்டளை இயக்குநர் லதா மதிவாணன் கூறுகையில், உலகெங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் மாசடைவது அதிகரித்து வருகிறது. ஆகவே இதன் பயன்பாட்டை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai