சுடச்சுட

    

    கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பேக்கரி தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை துவங்குகிறது.

    இதுகுறித்து சினர்ஜி எக்ஸ்போஸர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

    இக்கண்காட்சியில் பேக்கரி தயாரிப்புக்கு தேவையான ரோட்டரி அடுப்புகள், டெக் ஓவன், குக்கி பரப்பிகள், குளிர்பாதன இயந்திரங்கள், பால் பொருள்கள், பல்வேறு பேக்கரி உபகரணங்கள் மற்றும் சேவைகள் அடங்கிய 50-க்கு மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. அதேநேரத்தில் உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கரி விநியோக சேவை வல்லுநர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பேக்கரி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இக்கண்காட்சி ஜூன் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai