சுடச்சுட

  

  மழைநீர் சேகரிப்பு கண்காட்சி வ.உ.சி. மைதானத்தில் நாளை துவக்கம்

  By கோவை  |   Published on : 26th June 2014 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாநகராட்சியுடன் கோவை கட்டடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள், கட்டுமான சங்கத்தினர் இணைந்து நடத்தும் மழைநீர் சேகரிப்புக் கண்காட்சி வெள்ளிக்கிழமை துவங்குகிறது.

  இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் க.லதா, புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

  கோவை, வ.உ.சி. மைதானத்தில் கோவை கட்டட கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமான சங்கத்தினர் மாநகராட்சியுடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றனர். வெள்ளிக்கிழமை துவங்கும் இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

  இக்கண்காட்சியில் மழைக்காலத்தில் பெறக்கூடிய மழைநீரை முழுமையாக சேகரிக்க ஒவ்வொரு கட்டடத்திலும் அங்குள்ள இடவசதிக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை எவ்வாறு அமைப்பது என்பதை அனுபவம் வாய்ந்த கட்டட கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் செயல்விளக்கம் செய்துகாட்ட உள்ளனர்.

  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் எங்கு எந்த மதிப்பீட்டில் கிடைக்கும் என்பதற்கான அரங்குகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும்.

  மழைநீர் சேகரிப்பின் பல்வேறு முறைகள் மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப கட்டமைப்புகள் உருவாக்குவதற்கான மதிப்பீடுகள் தெரிவிக்கப்படும். மக்கள் தங்களது கட்டடத்தில் எவ்வகையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்கான வடிவமைப்புகள் மற்றும் மதிப்பீடுகள் உரிய நிறுவனங்கள் மூலம் தெரிவிக்கப்படும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்படும்.

  மழைநீர் சேகரிப்பு சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி 27-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை துவங்குகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் பார்வைக்கு கண்காட்சி திறந்திருக்கும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai