சுடச்சுட

    

    மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு:அரசுத் தரப்பில் இருவர் சாட்சியம்

    By கோவை,  |   Published on : 26th June 2014 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் புதன்கிழமை அரசு தரப்பில் இருவர் சாட்சி அளித்தனர்.

    கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி அந்த மாணவியின் தாய் மாமா கோபாலகிருஷ்ணன் (55), அவரது உறவினர் கருப்பசாமி (60), ஓய்வு பெற்ற மருத்துவமனை ஊழியர் பாலு (எ) பாலகிருஷ்ணன் (68), ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த ராகம் கருப்புசாமி (43) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.

    இவ் வழக்கு தற்போது கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பாலகிருஷ்ணன், ராஜன் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அதைத் தொடர்ந்து வழக்கு ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai