சுடச்சுட

    

    ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 40 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    மத்திய அரசால் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே காரணத்துக்காக கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 40 பேர் கோவை மத்திய ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    ரயில் நிலையம் முன்பு பாதுகாப்புப் பணியில் இருந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் அவர்களை ரயில் நிலைய நுழைவாயிலில் தடுத்து கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai