சுடச்சுட

  

  அன்னூர், குரும்பபாளையம், ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில், பொருளாதாரக் குற்றத்தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  தமிழ்நாடு காவல்துறை, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகியவை சார்பில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

  ஆதித்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சி.சுகுமாரன் வரவேற்றார். கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மா.பத்மநாபன் விளக்கி பேசினார்.

  கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

  இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் பிரதீப் வி.பிலிப் பேசியதாவது:

  தமிழகத்தில் தற்போது பொருளாதார குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. பல தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்து மக்களிடம் மோசடியில் ஈடுபடுகின்றன.

  மேலும், ஈமு கோழி, நாட்டுக்கோழி, கொப்பரைத் தேங்காய் போன்ற மோசடிகள் மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணினி மூலம் நடைபெறும் மோசடிகளிலும் மக்கள் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டு பணத்தை இழக்கின்றனர். இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்றார்.

  கருத்தரங்கில், பொருளாதாரக் குற்றத் தடுப்பு குறித்த நூல் வெளியிடப்பட்டது .

  நிகழ்ச்சியில், காவல்துறை கண்காணிப்பாளர்கள் (பொருளாதார குற்றப் பிரிவு) தம்பிதுரை, செல்வராஜ், வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai