அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
By சூலூர், | Published on : 27th June 2014 05:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை சூலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பாப்பம்பட்டி கிராம கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முருகேசன். இவரது அலுவலகத்திற்கு வியாழக்கிழமை காலையில் வந்த பாப்பம்பட்டியைச் சேர்ந்த மணியரசு என்பவர், வேறு ஒருவரின் பட்டா, சிட்டா ஆகியவற்றை கிராம நிர்வாக அதிகாரியிடம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு உரியவர் வந்து கேட்டால் மட்டுமே ஆவணங்கள் வழங்கப்படும் என்று முருகேசன் தெரிவித்துள்ளாராம். இதனால் ஆத்திரமடைந்த மணியரசு அவரை மிரட்டியுள்ளார்.
இது குறித்து கிராமநிர்வாக அலுவலர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் மணியரசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.