சுடச்சுட

  

  அன்னூரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து பணிமனை சென்னையில் தமிழக முதல்வரால் காணொலி முறையில் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

  கோவை கோட்டத்திற்கு உள்பட்ட அன்னூரில், ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து பணிமனையும், அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 22 லட்சம் செலவில் பேருந்து பணிமனைக்கான சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது.

  இப்பேருந்து பணிமனையை சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி முறையில் திறந்து வைத்தார். மேலும், அன்னூர் புதிய பேருந்து பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் 33 புதிய பேருந்துகளும், 8 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளையும் மக்களின் பயன்பாட்டிற்காக அவர் துவக்கி வைத்தார்.

  இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஏ.கருப்பசாமி, வி.சி.ஆறுக்குட்டி,

  சேலஞ்சர் துரை, மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், பேரூராட்சித் தலைவர் ராணி சௌந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai