சுடச்சுட

  

  அலுவலகப் பாதுகாப்புக்குத் தேவையான கருவியை வடிவமைக்க இன்டெல் முயற்சி

  By கோவை  |   Published on : 27th June 2014 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்குத் தேவையான கருவியை வடிவமைக்க இன்டெல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

  இது தொடர்பாக இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய விற்பனை இயக்குநர் பி.சூரியநாராயணன் கோவை செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

  இன்டெல் தொழில்நுட்பத்தை விநியோகிப்பவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கோவையில் நடத்தப்பட்டன. கம்ப்யூட்டர், டேப்லெட், கைபேசி ஆகியவற்றுக்கு இடையிலான தடையில்லா பிரவுசிங் அனுபவத்தை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தை விநியோகிப்பவரின் வலைத்தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்குத் தேவையான கருவியை வடிவமைக்க இன்டெல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக 3 மாநில அரசுகளிடம் பேச்சு நடத்தப்படுகிறது. நாட்டின் 3 நகரங்களில் இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

  தண்ணீர், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இன்டெல் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai