சுடச்சுட

    

    இலவச கல்வி சட்டத்தில் போலி மாணவர் சேர்க்கை: மதிமுக புகார்

    By கோவை,  |   Published on : 27th June 2014 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.) நடைபெறும் போலி மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்த வேண்டும் என்று மதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம், மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈசுவரன் அளித்துள்ள மனு விவரம்:

    கட்டாய இலவச கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சேர்க்க காலக்கெடு வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இச்சட்டத்தின்படி பெரும்பாலான பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அப்படியே சிலருக்கு வழங்கப்பட்டாலும் சேர்க்கையின்போது பல காரணங்களைக் கூறி ஏழை மாணவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அதிகமான மாணவர்களை சேர்த்துக்காட்ட வேண்டும் என்பதற்காக, நன்கொடையும் கட்டணமும் கட்டி சேர்க்கப்பட்ட மாணவர்களையே இச்சட்டப்படி சேர்த்துவிட்டதாக பல பள்ளிகள் பட்டியல் தயாரித்து வைத்திருக்கின்றன. ஓராண்டில் போலி சேர்க்கை நடத்தப்பட்டுவிட்டால், அதற்கான மாணவரின் பணம் பத்து ஆண்டுகளுக்கு வருடாவருடம் பள்ளிகளுக்குச் செல்லும்.

    இந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கை முறைகேடுகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்திடம் புகார் செய்து, சிறப்புக் குழு விசாரணை செய்யுமாறு கோருவோம்.

    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதுபோன்ற போலி சேர்க்கைகளை அம்பலப்படுத்தி சட்டப்படியான தீர்வு காண முயல்வோம். போலி சேர்க்கை நடத்துவதை பள்ளிக்கல்வித் துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai