Enable Javscript for better performance
ஒன்றிய அலுவலக காய்கறி தோட்டம்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் ஒன்றிய அலுவலக கட்டடத்தின் மேல்மாடியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறித் தோட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    சூலூர் ஒன்றிய அலுவலக கட்டடத்தின் மேல்மாடியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறித் தோட்டம் மாவட்டத்திலேயே முன்மாதிரி காய்கறித் தோட்டமாக அமைக்கப்பட்டு சுய உதவிக் குழுக்களால் பராமரிக்கப்படுகிறது.

    இங்கு விளையும் காய்கறிகள், கீரைகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கு அனுப்படுகின்றன.

    இந்நிலையில், புதன்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், இந்த காய்கறித் தோட்டத்தை ஆய்வு செய்தார். மற்ற அரசு அலுவலகங்களிலும் இது போல் அமைப்பது பற்றி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    சூலூர் ஒன்றிய குழுத்தலைவர் மாதப்பூர் பாலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai