Enable Javscript for better performance
கடன் வழக்குகளில் தீர்வு காண நாளை மக்கள் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    கடன் வழக்குகளில் தீர்வு காண நாளை மக்கள் நீதிமன்றம்

    By கோவை,  |   Published on : 27th June 2014 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ளடக்கிய கடன் வழக்குகளுக்குத் தீர்வு காண ஜூன் 28-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

    கோவையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாய மன்றம் மூலம் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ளடக்கிய கடன் வழக்குகளில் தீர்வு காண, திருச்சி சாலை, ராமநாதபுரத்தில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாய வளாகத்தில் ஜூன் 28-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    கடன் வசூல் தீர்ப்பாயம் மாவட்ட நீதிபதி ஜே.வி.ராஜ் முன்னிலையில் நடைபெற உள்ளது. அதில் 10 வங்கிகள், நிதி நிறுவனங்கள் கலந்துகொண்டு சமரசத் தீர்வின் மூலமாக வழக்குகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் அவரவர்கள் கடன் பெற்ற வங்கிகளை அணுகி, விவரங்களை சமர்ப்பித்து முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்று கடன் வசூல் தீர்ப்பாயத்தின் செயலர் ஆர்.தனபால் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai