சுடச்சுட

  

  சூலூர் அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற "உங்களுடன் நான்' நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் அதன் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் "உங்களுடன் நான்' என்ற கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவெடுத்துள்ளார். அதன் அடிப்படையில், கோவை மாவட்டம், சூலூர் அருகே ராவத்தூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு மாவட்டங்களின் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில், கட்சியின் வளர்ச்சி, மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகள், தேர்தலில் பணியாற்றாதோர் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டம் நடைபெற்ற அரங்கினுள் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

  விஜயகாந்த் பிறந்தநாளான ஆகஸ்டு 25, கட்சி துவக்க நாளான செப்டம்பர் 14 ஆகிய தேதிகளில் மக்களுக்கான நல உதவி வழங்குதல், கொடியேற்று விழா குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டுமென விஜயகாந்த் தெரிவித்ததாகவும், நிர்வாகிகள் கூறினர்.

  இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் தமிழ்முருகன், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் பாண்டியன், கோவை தெற்கு மாவட்டச் செயலாளரும் சூலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai