சுடச்சுட

    

    கோவை ரயில் நிலையத்தில் விரைவில் "ஸ்கைவாக்' எனப்படும் உயர்மட்ட நடைமேம்பாலம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

    கோவை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    தெற்கு ரயில்வேயில் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது வளர்ச்சித் திட்டப் பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ரயில் நிலையங்களில் தானியங்கி படிக்கட்டுகள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைத்தல், மேம்படுத்தப்பட்ட தரமான உணவு சேவை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இன்றைய சூழலில் 50 சதவீத ரயில் பயணச்சீட்டுகள் இணையம் மூலமாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன. எனவே கூடுதல் பயணச்சீட்டு விற்பனை மையங்களை ஏற்படுத்த வேண்டியதில்லை. எங்களுடைய குறிக்கோள், விற்பனை மையங்கள் மூலமாக ரயில்வே பயணச்சீட்டு வழங்குவது குறைக்கப்பட வேண்டும் என்பதே.

    இதற்காகவே "ஜனசதாரண்' எனப்படும் "அவுட்சோர்ஸிங்' மூலம் பயணச்சீட்டு விநியோகம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. கோவையில் 5 இடங்களில் ஜனசதாரண் பயணச்சீட்டு விநியோக மையங்களை செயல்படுத்தியுள்ளோம். இவை தற்போதைய பயணிகளின் வருகைக்கு போதுமானதாகும்.

    ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களைக் கண்டறிந்து தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த மாதத்தில் சென்னையில் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ. 1.4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம்.

    கோவை ரயில் நிலையத்தைப் பொருத்த வரை பயணிகளின் வசதிக்காக தானியங்கி படிக்கட்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்க உள்ளோம். உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்க இடம் கேட்டு அருகிலுள்ள தனியாரிடம் பேச்சு நடத்தி வருகிறோம். தற்போதைய வாகன நிறுத்துமிடத்தில் இருந்து முதலாவது நடைமேடைக்கு உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

    பின்பக்க நுழைவாயில் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும். பயணிகளின் நீண்டநாள் கோரிக்கைக்கு ஏற்ப போத்தனூர் வழியாகச் செல்லும் திருவனந்தபுரம், யஷ்வந்த்பூர் ரயில்கள் கோவை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன என்றார்.

    தொடர்ந்து ரயில் நிலையத்தில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமையவுள்ள இடம், பின்பக்க நுழைவாயில், சுரங்க நடைபாதை உள்ளிட்ட இடங்களில் அவர் ஆய்வு செய்தார். சேலம் கோட்ட ரயில்வே

    அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai