சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் போக்குவரத்து கழக கட்டுமான பிரிவு திறப்பு

    By பொள்ளாச்சி,  |   Published on : 27th June 2014 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொள்ளாச்சி கோட்டத்தில், புதிய கூடுதல் கட்டுமானப் பிரிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

    பொள்ளாச்சியில் 3 பேருந்து டிப்போக்களும், வால்பாறையில் ஒரு டிப்போவும் செயல்பட்டுவருகின்றன. இதில், பொள்ளாச்சியில் குட்ஸ்செட் சாலையில் உள்ள டிப்போவில் கட்டுமானப் பிரிவு

    ரூ. 16 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இதை, வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும், 3 பேருந்துளையும் பொள்ளாச்சி கோட்டத்திற்கு அவர் வழங்கினார்.

    பொள்ளாச்சியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, எம்.பி. மகேந்திரன் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலை வகித்தார். அதிமுக நகரச் செயலாளர் கிரி, கோட்ட மேலாளர் (தெற்கு) தேவதாஸ், கூண்டு கட்டுமானப் பிரிவு பணி மேலாளர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai