சுடச்சுட

    

    ராவணன் மீதான கடத்தல் வழக்கு ஜூலை 17-க்கு ஒத்திவைப்பு

    By கோவை,  |   Published on : 27th June 2014 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் கட்டட ஒப்பந்ததாரரைக் கடத்தி பணம் பறித்ததாக ராவணன், அவரது உதவியாளர் மோகன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு வரும் ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கோவை மாவட்டம், காரமடையைச் சேர்ந்தவர் கட்டட ஒப்பந்ததாரர் ரவிகுமார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    அதில், சசிகலாவின் உறவினரான கோவையைச் சேர்ந்த ராவணன், அவரது உதவியாளர் மோகன் ஆகியோர் தன்னைக் கடத்திச் சென்று ரூ. 10 லட்சம் பணத்தை பறித்ததாகப் புகார் அளித்தார். அதன்கீழ் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு கோவை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இவ்வழக்கு வரும் ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai