சுடச்சுட

  

  ரூ. 5 கோடி நிலம் ஆக்கிரமிப்பு: தொழிலதிபர் மீது வழக்கு

  By கோவை  |   Published on : 27th June 2014 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக கட்டுமானத் தொழிலதிபர் ஒருவர் மீது மாநகர நில அபகரிப்புத் தடுப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

  இதுகுறித்து போலீஸார் கூறியது: கோவை, சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்நடராஜ். இவர் கோவையின் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகிறார். சவுரிபாளையத்தில் ஒரு பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் 150 வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை அவர் கட்டினார்.

  அதில் ரூ. 5 கோடி மதிப்புள்ள 12.5 சென்ட் நிலத்தை மாநகராட்சி பயன்பாட்டுக்காக ஒதுக்கினார். பிறகு சில நாள்களில் அந்த இடத்தையும் ஆக்கிரமித்து நீச்சல் குளம், நடைபாதைகள் அமைத்தார். இதுகுறித்து மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது.

  புகாரைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சியினர் இதுகுறித்து மாநகர நில அபகரிப்புத் தடுப்பு பிரிவில் புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்திய போலீஸார், வியாழக்கிழமை ராஜ்நடராஜ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai