சுடச்சுட

  

  வேளாண் பல்கலை: முதுநிலை, முனைவர் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

  By கோவை  |   Published on : 27th June 2014 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2014-15ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, முதுகலை பட்டப் படிப்பில் 35 துறைகளிலும், முனைவர் பட்டப் படிப்பில் 26 துறைகளிலும், ஒருங்கிணைக்கப்பட்ட முனைவர் பட்டப் படிப்பில் நான்கு துறைகளிலும், வெளிப்புற முனைவர் ஆராய்ச்சி பட்டப் படிப்பில் 26 துறைகளிலும் நிகழ உள்ளது.

  பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் ஆகிய கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  பல்கலைக்கழக இணையதளம் வழியாக  மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணத்திற்கான வங்கி தொடர்பான இணைப்பு தரப்பட்டிருக்கும்.

  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து, அதனுடன் தகவல் குறிப்பேட்டில் குறிப்பிட்ட அனைத்து தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்திற்கான (பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000 மற்றும் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 500 (ஒரு பாடத்திற்கு) ரசீது ஆகியவற்றையும் இணைத்து முதன்மையர், முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை -641 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.முதுகலை பட்ட மேற்படிப்புக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற கடைசி நாள் ஜூலை 15-ஆம் தேதியாகும். முனைவர் பட்ட மேற்படிப்புக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி ஜூலை 28-ஆம் தேதியாகும்.

  நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை பற்றிய அனைத்து தகவல்களும் இ-மெயில் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்பட்டும்.

  எனவே அனைத்து மாணவர்களும் தங்களது இ-மெயில் மற்றும் அலைபேசி எண்களை சரியாக விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் பல்கலைக்கழகழகத்தின் இணையதளத்தையும் தவறாமல் பார்க்க வேண்டும்.

  முதுநிலை மேற்படிப்புக்கு ஜூலை 24-ஆம் தேதியும், முனைவர் பட்ட மேற்படிப்புக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதியும் நுழைவுத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்த மாணவர்களின் விவரம் முதுகலை படிப்புக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதியும், முனைவர் படிப்புக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதியும் வெளியிடப்படும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai