சுடச்சுட

    

    "1975 நெருக்கடி நிலை பிரகடனம் ஜனநாயகம் மீதான அடக்குமுறை'

    By கோவை,  |   Published on : 27th June 2014 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் பிரகடனப்படுத்தபட்ட நெருக்கடி நிலையானது ஜனநாயகத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட ஒரு அடக்குமுறை என்று, மனித உரிமை ஆய்வாளரான பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்.சுப்ரமணி பேசினார்.

    சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை, கோவை வழக்குரைஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு விரிவுரை நிகழ்ச்சியில் ஆர்.சுப்ரமணி பேசியது:

    கடந்த 1971-ஆம் ஆண்டுமக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம், ரேபெலி தொகுதியில் வெற்றி பெற்று இந்திராகாந்தி பிரதமரானார். அவரது வெற்றிக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற இறுதித் தீர்ப்பால் இந்திராகாந்தி பதவி விலகும் சூழல் ஏற்பட்டபோது, 1975 ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவில் நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

    நெருக்கடி நிலையின் போது அரசுக்கு எதிர்க் கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். நீதிமன்றங்களும் பத்திரிகைகளும் அப்போது பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. ஜனநாயகத்தின் பெயரால் அனைத்து அத்துமீறல்களும் அப்போது நிகழ்த்தப்பட்டன.

    அந்தக் காலகட்டத்தில் காணாமல் போன பலர் பற்றி இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அது ஒரு இருண்ட காலமாகும் என்றார். மேலும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பல்வேறு சட்ட நடைமுறைகள் குறித்து அவர் விளக்கினார்.

    வழக்குரைஞர் சங்கத் தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். செயலாளர் லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai