சுடச்சுட

  

  கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  இதுகுறித்து போலீஸார் கூறியது:

  கோவை, சத்தி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மில் அருகே தேசிய மயமாக்கப்பட்ட தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு காவலாளிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.

  வெள்ளிக்கிழமை காலை பணம் எடுக்க உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் தனது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். பிறகு திடீரென ஒரு கல்லை எடுத்து அந்த ஏடிஎம் இயந்திரத்தின் எண்கள் அழுத்தும் பகுதியைத் தாக்கி உடைக்க முயன்றுள்ளார்.

  இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஏடிஎம் மையத்துக்கு வெளியில் இருந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். இதனால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

  சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற சரவணம்பட்டி போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளைக் கொண்டு அந்த நபரைத் தேடி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai