சுடச்சுட

  

  புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டப் பயன்களைப் பெற ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களைச் செலுத்த ஜூலை 31- ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  1.7.2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களை உரிய படிவத்தில் ஜூன் 30-க்குள் அளிக்க வேண்டும்.

  இத்திட்டத்திற்கான படிவங்களை பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கியில் இன்னமும் அளிக்காத காரணத்தால், இதற்கான காலக்கெடு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு அனுமதித்து உள்ளது.

  எனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவற்றை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கிக் கிளையில் அளித்து அதன் நகலினை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையெழுத்துடன் மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

  அதுபோலப் பெறப்படும் படிவ நகலினை அடையாள அட்டை வழங்கப்படும் வரை இத்திட்டத்தின் கீழ் பணச்செலவின்றி ஜூலை 1- ஆம் தேதி முதல் மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தி கொள்ளலாம்.

  ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலங்கள் மற்றும் பொதுத்துறை வங்கி மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று கூடுதல் கரூவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai