சுடச்சுட

    

    கட்டுமானப் பொருள்களின் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டுகோள்

    By கோவை,  |   Published on : 28th June 2014 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோவை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து கோவை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    தற்போது கட்டுமான பொருள்களின் விலையேற்றத்தால் தொழிலே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரூ. 280 ஆக இருந்த சிமென்ட் மூட்டை ரூ. 360-க்கும், ரூ. 42 ஆயிரமாக இருந்த ஒரு டன் கம்பி ரூ. 51 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பொருள்களும் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளன. தற்போது ரயில் கட்டண உயர்வு காரணமாக மேலும் விலை உயரும் வாய்ப்புள்ளது.விலை உயர்வு காரணமாக சிறு கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பேசியபடி வேலைகளைச் செய்து கொடுக்க முடியாமல் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதுடன், அப் பொருள்களை அத்தியாவாசிய சட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தவிர, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய திருமண உதவித்தொகை, குறைந்த வட்டிக் கடன், மருத்துவ உதவி, பிரசவ உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் கடந்த 8 மாதங்களாக வழங்கப்படவில்லை. இந்த உதவித்தொகைகள் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பல்வேறு தொழிற்சங்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai