சுடச்சுட

    

    ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து, கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மத்திய இணையமைச்சர் நிகால்சந்த் பதவி விலகக் கோரியும், மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் கணபதி சிவகுமார் வரவேற்றார்.

    மாநில பொதுச்செயலாளர் வீனஸ் மணி, மாநில துணை தலைவர் தாரா சபீ, நிர்வாகிகள் குனியமுத்தூர் ஆறுமுகம், டி.வி.மணி, வீனஸ் மணி, கே.பி.எஸ்.மணி உள்பட நூற்றுக்கு மேற்பட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai