சுடச்சுட

    

    கோவை மாநகர காவல்துறை சார்பில் பசுமை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மாநகர் முழுவதும் 3,000 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகரில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு சார்ந்த பகுதிகளில் இந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. முதல்கட்டமாக 18 பள்ளிகளில் 760 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

    மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் பணியைத் தொடங்கி வைக்கிறார்.

    இது மாநகரின் பசுமை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு பணி என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai