சுடச்சுட

  

  மதுக்கரை வட்டத்துக்கு உள்பட்ட குறிச்சி வருவாய் கிராமங்களுக்கான அம்மாதிட்ட முகாம், சுந்தராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  மதுக்கரை வட்டாட்சியர் சுகுமாரி தலைமை வகித்தார். இதில் 495 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை விண்ணப்பம், முதல் பட்டதாரிச் சான்றிதழ் உள்ளிட்ட 365 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனடித் தீர்வு காணப்பட்டன.

  மீதமுள்ள 130 மனுக்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் தீர்வு காணப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai