சுடச்சுட

  

  கெயில் நிறுவன காஸ் குழாய்களை மாற்றுப்பாதையில் அமைக்க வலியுறுத்தல்

  By கோவை  |   Published on : 28th June 2014 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆந்திரத்தில் நிகழ்ந்த கெயில் நிறுவன காஸ் குழாய் விபத்தைக் கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் பைப் லைன் திட்டத்தை மாற்றுவழியில் அமைக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

  ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவன காஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 15 பேர் பலியாகி உள்ள சம்பவம் நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டு காலமாக கெயில் நிறுவனம் மூலம் கொச்சியில் துவங்கி, கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களின் வழியாக கிராமப்புற விவசாய நிலங்களில் காஸ் குழாய் அமைக்க திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியது.

  விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்த பின்னரும், கெயில் நிறுவனம் விடாப்பிடியாக விவசாய நிலங்களில் தான் பைப் லைன் பதிப்போம் என்று கூறி வருகிறது.

  தமிழக விவசாயிகள் அச்சப்பட்டது போல, தற்போது ஆந்திர மாநிலத்தில் காஸ் பைப்லைன் வெடித்து 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் எரிந்துவிட்டன.

  எனவே, தமிழகத்தில் காஸ் பைப் லைன் திட்டத்தை விவசாய நிலங்களை தவிர்த்து மாற்றுவழியில் கொண்டு செல்வதற்கு பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மாற்றுப் பாதையை மாநில அரசு உறுதியாக வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai