சுடச்சுட

  

  கேரளத்திற்கு ரேஷன் அரிசி மாவு கடத்திய மில் உரிமையாளர் கைது

  By கோவை  |   Published on : 28th June 2014 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்னூர் பகுதியில் ரேஷன் அரிசியை அரைத்து கேரளத்திற்கு கடத்திய மில் உரிமையாளரை கோவை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர்.

  கோவை மாவட்டம், அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை மாவாக அரைத்து சிலர் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதாக கோவை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

  ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீஸார் அப்பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது மூர்த்தி (55) என்பவர் தனது மில்லில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக மூட்டைகளில் கேரளத்திற்கு கடத்துவது தெரியவந்தது.

  அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த அதிகாரிகள், அங்கிருந்து 3,000 கிலோ ரேஷன் அரிசி மாவு, 800 கிலோ ரேஷன் அரிசி, மாவு அரைக்கும் இயந்திரம், பைக் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai