Enable Javscript for better performance
தலையில் கல்லைப் போட்டு அண்ணன் கொலை: தம்பி தலைமறைவு- Dinamani

சுடச்சுட

    

    தலையில் கல்லைப் போட்டு அண்ணன் கொலை: தம்பி தலைமறைவு

    By கோவை,  |   Published on : 28th June 2014 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் அண்ணன் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸார் கூறியது:

    கோவை, சரவணம்பட்டி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கணபதி, காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தான் (எ) ரங்கசாமி. இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு நாச்சிமுத்து (20), மணிகண்டன் (17), ஜோதிலட்சுமி (14) ஆகிய மூன்று பிள்ளைகள்.

    ரங்கசாமி, வசந்தா இருவரும் தனியார் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். நாச்சிமுத்து அதே பகுதியில் உள்ள பணிமனை ஒன்றில் வேலை செய்து வந்தார். ஜோதிலட்சுமி பள்ளியில் படித்து வருகிறார். மணிகண்டன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார்.

    மணிகண்டன் போதைக்காக கஞ்சா பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக நாச்சிமுத்து அவரைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் பிரச்னைகள் ஏற்படுமாம். வியாழக்கிழமை இரவும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து வீட்டில் நாச்சிமுத்து தனி அறையில் உறங்கியுள்ளார். மணிகண்டன், ஜோதிலட்சுமி ஆகியோர் பெற்றோருடன் உறங்கியுள்ளனர். நள்ளிரவு நேரம் வீட்டில் நாச்சிமுத்து அறையிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது.

    ரங்கசாமி உள்ளிட்டோர் கண்விழித்து பார்க்கையில் மணிகண்டனைக் காணவில்லை. நாச்சிமுத்து அறைக்குள் சென்று பார்க்கையில் அங்கு அவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் ஒரு பெரிய கல் கிடந்தது.

    உடனடியாக அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மீண்டும் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் நாச்சிமுத்துவின் தலையில் கல்லைப் போட்டு தாக்கிவிட்டுத் தப்பி ஓடியது தெரிந்தது. வழக்குப் பதிவு செய்த போலீஸார் மணிகண்டனைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai