சுடச்சுட

  

  நொய்யல் ஆற்றுப்படுகையில் இயங்கும் குடிநீர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

  By கோவை  |   Published on : 28th June 2014 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நொய்யல் ஆற்றுப்படுகைகளில் அனுமதி பெறாமல் இயங்கிவரும் குடிநீர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம் உறுதியளித்தார்.

  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

  இதில், விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) பொதுச்செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசியது:

  நொய்யல் ஆற்றுப்படுகைகளில் தனியார் குடிநீர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் நடக்கின்றனவா அல்லது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.

  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை பெற்று நடக்கவில்லை எனில் அனுமதி பெறாத குடிநீர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். மேலும், தடையில்லாச் சான்று பெறவும் மத்திய அரசின் அரசாணையில் வழிவகை இல்லை.

  இதுவரை நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்புக்குரியதாக உள்ளது. எனவே, அனுமதி பெறாத குடிநீர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  இதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர் க.கற்பகம், நொய்யல் ஆற்றுப்படுகைகளில் இயங்கிவரும் குடிநீர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

  உர முறைகேடு தொடர்பாக 4 பேர் கொண்ட குழுவை மாவட்ட அளவில் அமைக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் வட்ட அளவில் அமைத்திருப்பது ஏற்புடையதல்ல. மேலும், உர முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு விவசாயி கோரினார்.

  இதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர், உர முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு தொடர்பாக நான்கு உர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதர நிறுவனங்கள் மீது 10 நாளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  குறைதீர்ப்புக் கூட்டத்தில் இதர விவசாயிகள் பேசியது:

  கோவையில் உள்ள செல்வபுரம், பொன்னையராஜபுரம் பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறை கழிவுநீர், நீர்நிலைகளில் விடப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

  கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஆழ்துளைக் கிணறுகளில் விடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. ஆழ்துளை கிணறுகளில் கழிவுநீர் விடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் முறையிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai