பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை தடுப்பு முகாம்
By சூலூர் | Published on : 28th June 2014 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இருகூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார அலுவலர்கள், பீடம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை ரத்த சோகை தடுப்பு மருந்துகளை வழங்கினர்.
பீடம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம், மருத்துவ அலுவலர்கள் டாக்டர் உமர் பரூக், கோசலைகண்ணன் முன்னிலையில், பீடம்பள்ளி ஊராட்சித் தலைவர் கோ.குமரவேல் தலைமையில் நடைபெற்றது.
இங்கு பயிலும் 334 மாணவர்களுக்கு வாரம் ஒரு மாத்திரை வீதம் ஒரு வருடத்திற்குத் தேவையான 11,756 மாத்திரைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாக பீடம்பள்ளி ஊராட்சித் தலைவர் குமரவேல் தெரிவித்தார்.