சுடச்சுட

    

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு:கைது செய்யப்பட்டவருக்கு காவல் நீட்டிப்பு

    By கோவை  |   Published on : 28th June 2014 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட இளைஞரை ஜூலை 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    பொள்ளாச்சியில் கடந்த 11-ஆம் தேதி இரவு டிஇஎல்சி விடுதியிலிருந்து சிறுமிகள் இருவர் கத்திமுனையில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொள்ளாச்சி கிழக்கு போலீஸார், வால்பாறையைச் சேர்ந்த வீராசாமி (23) என்ற இளைஞரை கைது செய்தனர். தற்போது இவ்வழக்கு பொள்ளாச்சி மகளிர் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இவ்வழக்கு தொடர்பான விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது வீராசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவரை ஜூலை 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி எம்.பி.சுப்ரமணியன் உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai