சுடச்சுட

    

    மக்கள் கோரிக்கைகளுக்காக ஜனநாயக இயக்கங்கள் நடத்த கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    கட்சியின் கோவை மாவட்டக்குழு கூட்டம், வியாழக்கிழமை காந்திபுரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

    மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன். மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளியங்கிரி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

    கோவை மாநகராட்சியின் பரப்பளவு எல்லை 102 சதுர கி.மீ. கோவை மாநகராட்சியோடு விரிவுபடுத்தப்பட்டுள்ள எல்லைகளையும் சேர்த்தால் 257 சதுர கி.மீ. விஸ்தரிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் பெரும் பகுதியும் (துடியலுர் பகுதி நீங்கலாக) இருகூர், சின்னியம்பாளையம் பஞ்சாயத்து பகுதிகளும் கோவை மாநகர காவல்துறையின் எல்லைக்குள் வருகின்றன. கோவை மாநகர காவல்துறை எல்லைக்கு உள்பட்ட பகுதியின் மக்கள் தொகை சுமார் 20 லட்சம்.

    பரந்து விரிந்துள்ள இந்த மாநகரப் பகுதியில் ஜனநாயக இயக்கங்கள், மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் நடத்துவதற்கு, கோவை மாநகர காவல்துறையால் காந்திபுரம் மத்திய பேருந்துநிலையம் முன்புறமும், செஞ்சிலுவை சங்கம் முன்புறமும் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

    சுமார் 20 லட்சம் மக்கள்தொகை உள்ள மாநகரத்தில் ஜனநாயக இயக்கங்கள் நடத்துவதற்கு 2 இடங்கள் மட்டுமே போதுமானதல்ல.

    மக்களின் இன்றியமையாத பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்திட கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai