சுடச்சுட

  

  மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள உயர்கல்வி பெற வேண்டும் என்று என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சி.ராமசாமி தெரிவித்தார்.

  பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 58-வது முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

  என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் பேராசிரியர் சி.ராமசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிவண்ணன் வரவேற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் மதிப்பியல் தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

  இதில் பேராசிரியர் சி.ராமசாமி பேசியது:

  நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி 60 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது; என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தாய் நிறுவனமாக விளங்குகிறது. கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்குத் தேவையான நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் போன்ற அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள உயர்கல்வியைப் பெற வேண்டும் என்றார்.

  கல்லூரியின் இயக்குனர் விஜயரங்கன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில், கல்லூரியின் செயலர், முதல்வர், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai