சுடச்சுட

    

    மூலத்துறை அரசு பள்ளியில் சதுரங்கப் பயிற்சி முகாம்

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 28th June 2014 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியில் சதுரங்க விளையாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    பள்ளி மாணவர்கள் சதுரங்க விளையாட்டில் திறன் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழக அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சதுரங்கப் பயிற்சியை ஊக்குவித்து வருகிறது. அதன் அடிப்படையில், சிறுமுகையை அடுத்துள்ள மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டுப் பயிற்சி முகாமுக்கு தலைமையாசிரியர் பத்திரம்மாள் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் அமுதா, அங்கையற்கண்ணி, பிரேமாள் ஆகியோர் முன்னிலை வகிக்க, சதுரங்க ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார் வரவேற்றார்.

    முகாமில் பங்கேற்ற சதுரங்கப் பயிற்சியாளர் கணேஷ், மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை விளக்கி, சதுரங்கப் போட்டிகளையும் நடத்தினார். இதில் பள்ளி மாணவர்கள் 45 பேர், 5 குழுக்களாகப் பங்கேற்று விளையாடினர்.

    இறுதியில் மாணவர்கள் பிரவீண்குமார் முதலிடத்திலும், ராகுல் 2-மிடத்திலும், திவ்யதர்ஷினி 3-மிடத்திலும் வென்றனர்.

    போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர் திருமுருகன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai