சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கோவை விஜயலட்சுமி அறக்கட்டளை உதவி

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 28th June 2014 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான உதவிகள், தங்கள் அறக்கட்டளை சார்பில் மேட்டுப்பாளையம் அரிமா சங்கம் மூலம் வழங்கப்படும் என்று கோவை ஸ்ரீ விஜ யலட்சுமி பொதுநல அறக்கட்டளையின் நிறுவனர் ஓ. ஆறுமுகசாமி தெரிவித்தார்.

    மேட்டுப்பாளையம் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, வியாழக்கிழமை மாலை ராமு கவுடர் திருமண அரங்கில் நடைபெற்றது. சங்கத் தலைவர் வழக்குரைஞர் சீனிவாசன் தலைமை வகித்தார். அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் நவரத்தன்மல், வின்சென்ட் வேதராஜ், மாவட்டத் தலைவர் பி.என்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ஞானமூர்த்தி செயலறிக்கையையும், பொருளாளர் பரமசிவம் சங்க வரவு செலவையும் வாசித்தனர். அரிமா மாவட்ட துணை ஆளுநர் தங்கப்பழம் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்தார்.

    சங்கத்தின் புதிய நிர்வாகிகளில், எல்ஐசி ஜெயகுமார் தலைவராகவும், கிருஷ்ணன், அப்துல் கரீம், ஆனந்தன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், தீன்முகமது செயலராகவும், செல்வகுமார் இணைசெயலாளராகவும், ஜோசப் ரோஜர் பொருளாளராகவும் பொறுப்பேற்றனர்.

    ராஜரத்தினம், தர்மராஜ், அப்பாஸ் அலி, காத்தன், சித்ரவேலு, அபூபக்கர், ராமசந்திரன், தங்கவேலு, பிஷப் தங்கப்பன், உதயகுமார் ஆகியோர் இயக்குனர்களாகவும், பி.என்.ராஜேந்திரன், ரஹமதுல்லா, சுப்பையைன் ஆகியோர் குழு பொறுப்பாளர்களாகவும் பதவியேற்றனர்.

    புதிய நிர்வாகிகளுக்கு அரிமா மாவட்ட ஆளுநர் நாகின் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கோவை விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி பேசியது:

    இல்லாதோருக்கு வேண்டிய உதவிகளை தேடிச் சென்று செய்வது, இறைவனுக்குச் செய்யும் சேவைக்கு ஒப்பானதாகும். மேட்டுப்பாளையம் அரிமா சங்கம் கடந்த 44 ஆண்டுகளாக சமுதாய சேவையில் ஈடுபடுவது பாராட்டிற்குரியது.

    எங்கள் அறக்கட்டளை சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு ஒவ்வோர் ஆண்டும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ரூ. ஒரு கோடி நிதி வழங்கி வருகிறோம். அதேபோல், இந்த வருடம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் தேவையான உதவிகளை மேட்டுப்பாளையம் அரிமா சங்கம் மூலம் வழங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

    விழாவில் ரூ. ஒரு லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் அரிமா மாவட்ட துணை ஆளுநர் விஜயகுமார், அமைச்சரவை பொருளாளர் அருளானந்தம், மண்டலத் தலைவர் மோகன்குமார், தமிழ்நாடு ஒக்கலிக மகாஜன சங்க மாநிலத் தலைவர் வெள்ளியங்கிரி, நகரமன்றத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கச் செயலாளர் தீன் முகமது நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai