சுடச்சுட

    

    கோவையில் வெள்ளிக்கிழமை ஓடும் ரயிலில் செல்போன் பறித்த கேரள இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்ஸ்டேனி. இவர் திருப்பூர், மண்ணரை பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை சேலத்திலிருந்து கோவை வரும் பயணிகள் ரயிலில் திருப்பூரிலிருந்து கோவை வந்துள்ளார்.

    ரயில் பீளமேடு தாண்டி வடகோவை அருகே சென்றபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஜான்ஸ்டேனியின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றார். ஆனால் அருகிலிருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அவரைப் பிடித்து கோவை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில், அவர் கேரள மாநிலம், திருவனந்தபுரம், வள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்த எஸ்.அருண்தேவ் (25) என்பது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர்.

    மற்றொருவர் கைது: கோவை ரயில்நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் நாகராஜ். வெள்ளிக்கிழமை காலை இவரது செல்போனைத் திருடிய ஒருவரை ரயில்வே போலீஸார் பிடித்தனர். விசாரணையில், அவர் திருநெல்வேலி, நாங்குநேரியைச் சேர்ந்த பி.கணேசன் (50) என்பது தெரியவந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai