சுடச்சுட

    

    ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 24 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    மத்திய அரசு சார்பில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே காரணத்துக்காக கோவையில் புதிய தமிழகம் கட்சியினர் 24 பேர் மாவட்டச் செயலாளர் நக்கீரன் தலைமையில் கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    ரயில் நிலையம் முன்பு பாதுகாப்புப் பணியில் இருந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் அவர்களை ரயில் நிலைய நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai