சுடச்சுட

    

    வணிகவரி சோதனைச் சாவடிகளில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு

    By மதுக்கரை,  |   Published on : 28th June 2014 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே வாளையாறு, வேலந்தாவளம் வணிகவரி சோதனைச்சாவடிகளில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    கோவையிலிருந்து கேரளம் செல்லும் வழியிலுள்ள வணிகவரி சோதனைச் சாவடிகளான க.க.சாவடி, வாளையாறு சோதனைச்சாவடிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாளையாறு சோதனைச் சாவடிக்கு அருகில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களை அவர் பார்வையிட்டார்.

    பின்னர் கேரளப் பகுதியிலுள்ள சந்திராபுரம் விற்பனைவரி சோதனைச்சாவடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் பார்வையிட்டார்.

    வேலந்தாவளம் வணிகவரி சோதனைச்சாவடியில் தணிக்கைக்காக வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக அதன் அருகே புதிதாக சோதனைச்சாவடி கட்டுவதற்காக தேர்வு செய்யப்படவுள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது அமைச்சருடன் வணிகவரித் துறை ஆணையர் கே.ராஜாராம், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அரசு செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai