சுடச்சுட

    

    வியாபாரிகளிடம் பணம் பறித்த வழக்கு: விசாரணைக்கைதி சிறையிலடைப்பு

    By கோவை,  |   Published on : 28th June 2014 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் வடமாநில வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் புஷ் அபுதாகிர் என்பவரை காவல் விசாரணை முடிந்து சிபிசிஐடி போலீஸார் சிறையிலடைத்தனர்.

    கோவை, ரங்கே கவுடர் வீதியில் உள்ள வடமாநில வியாபாரிகளை கடந்த டிசம்பர் மாதம் மிரட்டி பணம் பறித்த வழக்கில், கோவை, குனியமுத்தூரை சேர்ந்த ஜிம் ஹக்கீம் உள்பட 14 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

    இவ் வழக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிசிஐடி போலீஸார், வழக்கில் முக்கிய நபராகத் தேடப்பட்டு வந்த வெள்ளலூரைச் சேர்ந்த புஷ் அபுதாகிரை சில தினங்களுக்கு முன் கைது செய்து கோவை சிறையிலடைத்தனர்.

    பிறகு செவ்வாய்க்கிழமை அவரை நீதிமன்ற அனுமதியுடன் இரு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு வியாழக்கிழமை மாலை அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai