Enable Javscript for better performance
அண்ணன் கொலை: தம்பி கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் அண்ணன் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

    கோவை, சரவணம்பட்டி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கணபதி, காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தான் (எ) ரங்கசாமி. இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு நாச்சிமுத்து (20) உள்பட மூன்று பிள்ளைகள் இருந்தனர்.

    வியாழக்கிழமை நள்ளிரவு நாச்சிமுத்து அவரது அறையில் தலையில் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கிடந்தார். பிறகு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார், ரங்கசாமியின் 17 வயது மகனை இதுதொடர்பாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை போலீஸார் தேடப்பட்டு வந்த அந்த 17 வயது இளைஞரைக் கைது செய்து பொள்ளாச்சியில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்குக் கொண்டுசென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai