சுடச்சுட

    

    ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் விநியோகம் துவக்கம்

    By கோவை  |   Published on : 29th June 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் 4 இடங்களில் ரூ. 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் விநியோகத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை துவக்கி வைத்தார்.

    91-ஆவது வார்டில் சுகுணாபுரம்- மல்லையன் கார்டன் பகுதியிலும், 92-ஆவது வார்டில் பி.கே.புதூர், கிருஷ்ணசாமி நகர் பகுதியிலும், 77-ஆவது வார்டில் ரங்கசாமி கோவில் வீதி, நஞ்சப்பா கார்டன் வீதி பகுதிகளிலும் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீர் விநியோகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

    மேயர் (பொறுப்பு) சு.லீலாவதி உண்ணி, மாநகராட்சி ஆணையர் க.லதா, துணை ஆணையர் சு.சிவராசு, தெற்கு மண்டலத் தலைவர் எம்.பெருமாள்சாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai