சுடச்சுட

  

  கோவை சரக ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்றன.

  கோவை, திருப்பூர், ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கிய கோவை சரக ஊர்க்காவல் படையினருக்கான இவ் விளையாட்டுப் போட்டிகளில் 250 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் வாலிபால், கபடி ஆகிய குழுப் போட்டிகள், தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. குழுப் போட்டிகளில் ஆண்கள் வாலிபால் போட்டியில் கோவை மாநகர அணியும், கபடியில் திருப்பூர் மாவட்ட அணியும் வெற்றி பெற்றன.

  ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட அணிகள் சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

  போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai