Enable Javscript for better performance
கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை அருகே சனிக்கிழமை கிணற்றில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான். இதுகுறித்து போலீஸார் கூறியது:

    கோவை, சிங்காநல்லூர் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட ஒண்டிப்புதூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுயம்பு (10). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அருகில் சுப்பநாயக்கன் தோட்டம் என்ற பகுதியில் உள்ள 60 அடிக் கிணறு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றார். கிணற்றில் பாதியளவுக்கு தண்ணீர் இருந்துள்ளது.

    மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் திடீரென சுயம்பு கிணற்றில் தவறி விழுந்தார். நண்பர்களின் கூக்குரல் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் சுயம்பு நீரில் மூழ்கினார். உடனே கோவை தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai