சுடச்சுட

  

  கிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் கலந்துரையாடிய முன்னாள் மாணவர்

  By பொள்ளாச்சி  |   Published on : 29th June 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் முன்னாள் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

  பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதுôர் கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் அருண்குமார், அமெரிக்காவில் உள்ள ஐபிஎம் கம்பெனியின் திட்ட மேலாளராக உள்ளார். அவர், கிருஷ்ணா வித்யாலயா பள்ளிக்கு கடந்த வியாழக்கிழமை வருகை தந்தார். அப்போது மாணவர்களிடம் அவர் பேசியது:

  மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து, சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களிடமிருந்து வித்யாசமாகச் சிந்தித்தால் எதையும் சாதிக்க முடியும். முதல் மதிப்பெண் பெற்றவர் தான் சாதனையாளராக வருவார் என்று எண்ணாமல், தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். படிப்படியாகத் திட்டமிட்டு இலக்கை அடைய நினைத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டம் நிறைவேறும்.

  சவால்களையும் தோல்விகளையும் வாழ்க்கையில் கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அவற்றைச் சமாளிக்கும் மனோதிடம் இருந்தால் சாதனைகள் நம்மை நாடிவரும் என்றார்.

  பள்ளித் தாளாளர் ஆனந்தகணேசன், முதல்வர் செல்வி ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai